/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிர்வாகத்துக்கும் தொழிலாளருக்கும்
/
நிர்வாகத்துக்கும் தொழிலாளருக்கும்
ADDED : நவ 22, 2024 12:07 AM

திருப்பூர் ; ''திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் மனித நேயம் முறையாகப் பின்பற்றப்படுகிறது. இதனால், தொழிலில் அமைதி நிலவுகிறது'' என, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன் பேசினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் ஒரு அமைப்பான, தொழில் வளம் பங்களிப்போர் அமைப்பு சார்பில், மனித வள மேலாளர்கள் (ஹெச்.ஆர்.,) மாநாடு நேற்று நடைபெற்றது. திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நடந்த இம்மாநாட்டில் அமைப்பின் தலைவர் இளங்கோவன் வரவேற்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்து பேசியதாவது:
திருப்பூர் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், இந்த அமைப்பு பல்வேறு தரப்பினரையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மூலம் தொழிலாளர் நலம், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து, அதை செயல்படுத்தும் வகையில் இயங்கி வருகிறது. வேறு எந்த பகுதியிலும் இல்லாத வகையில், இங்கு இரு தரப்பிடையேயும் ஒரு சிறந்த சுமூக உறவு உள்ளது.
தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நலன் மட்டுமின்றி, தொழில் அமைதி மற்றும் திருப்பூர் நகரின் அமைதி, வளர்ச்சி ஆகியவற்றைக் கருதி செயல்பட்டு வருகிறோம். மனித வளம் என்பதை விட, மனித நேயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் இந்த நடவடிக்கையை பெரிதும் வியப்புடன் பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, திருப்பூர் தொழில் நிறுவனங்களின் மனித வள மேலாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர். காலையில் நடைபெற்ற முதல் அமர்வில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் வளர்ச்சியில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு குறித்து பேசினர். இதற்கு ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி முன்னிலை வகித்தார்.
மதியம் நடைபெற்ற இரண்டாவது அமர்வுக்கு, ஏற்றுமதியாளர் சங்க பொருளாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்து பேசினார். இதில் மனித வள மேம்பாடு குறித்து பல்வேறு வல்லுநர்கள் பேசினர். ஈஸ்ட்மென் நிறுவனங்களின் தலைவர் சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். செயற்குழு உறுப்பினர் ராமு நன்றி கூறினார்.
கற்றோர்க்குச் சென்ற
இடமெல்லாம் சிறப்பு
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்
பேரு தான் பெத்த பேரு...
தாக நீலு லேது!
மருந்து கால்...
மதி முக்கால்!
அழுத பிள்ளைக்கு தான்
பால் கிடைக்கும்
சாது மிரண்டால்
காடு கொள்ளாது