தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரூ.10,000 லஞ்சம் வாங்கிய போர்மேன், இன்ஜி., கைது

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய போர்மேன், இன்ஜி., கைது

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய போர்மேன், இன்ஜி., கைது


ADDED : மே 08, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2025 01:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம், மருதுரையான் வலசு அருகேயுள்ள மீனாட்சி வலசைச் சேர்ந்தவர் சாமிநாதன், 60; விவசாயி. இவர், கடைகளுக்கு வணிக மின் இணைப்பு கேட்டு, படியூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

மின் இணைப்பு வழங்க, மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷ், 45, என்பவர், 10,000 ரூபாய் லஞ்சமாக கேட்டார்.

திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் சாமிநாதன் புகார் அளித்தார். இதையடுத்து, 10,000 ரூபாய் லஞ்சப் பணத்தை, உதவி பொறியாளர் வழிகாட்டுதலில், போர்மேன் நந்தகோபால், 52, வாங்கினார்.

அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார், வெங்கடேஷையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

துாத்துக்குடி: துாத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள யூனியன் அலுவலக வளாகத்தில், துாத்துக்குடி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் யூனியன் அலுவலகங்களில் நடைபெறும் பணிகளுக்கான பணம் கான்ட்ராக்டர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாவட்ட ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்ஜினியராக கார்த்திகேயன், 51, என்பவர் உள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று திடீரென உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்த இன்ஜினியர் கார்த்திகேயன் மற்றும் அலுவலகத்திற்கு தொடர்பு இல்லாத சத்யா என்ற பெண் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத, 1.06 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us