/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசாரணை கைதி மரணம் வன ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
/
விசாரணை கைதி மரணம் வன ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
UPDATED : ஆக 02, 2025 02:26 AM
ADDED : ஆக 02, 2025 02:23 AM

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரக அலுவலகத்தில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட, பழங்குடியினத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மர்மமான முறையில் இறந்தார்.
![]() |
இரண்டாவது நாளாக நேற்றும், கேரள மாநிலம், மூணாறு, மறையூர் பகுதியை சேர்ந்த, 140 மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள், 500க்கும் மேற்பட்டோர், உடுமலை வனச்சரக அலுவலகம் முன் திரண்டனர்.
நேற்று இரவு, 9:20 மணிக்கு திருப்பூரிலிருந்து மாரிமுத்து சடலம் வந்த நிலையில், 'நடவடிக்கை விபரங்கள் மற்றும் வனத்துறையினர் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். அதற்கு பின் தான், சடலத்தை கொண்டு செல்ல வேண்டும்' என, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் தாக்கியது, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதை அடுத்து, வனத்துறையினர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்து, கைது செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டது.
மறையூர் அருகே பெரியகுடி மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு போலீஸ் பாதுகாப்புடன் சடலம் கொண்டு செல்லப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக வனவர் நிமல், வனக்காவலர் செந்தில்குமார் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.