/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலரும் நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்
/
மலரும் நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்
ADDED : செப் 29, 2025 12:29 AM

அவிநாசி; கருவலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 1990 மற்றும் 1995 வரை படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமிக்கும் விழா அம்மன் மஹாலில் நடந்தது.
மறைந்த ஆசிரியர்களின் படங்களுக்கு மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தி வணங்கினர். முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மாரியம்மன் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள்பள்ளி பருவ மலரும் பழைய நினைவுகளையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொண்ணுாறுகளில் பெட்டிக்கடைகளில் விற்கப்பட்ட பொரி உருண்டை, கம்மர் கட்டு, பம்பாய் சக்கர மிட்டாய் உள்ளிட்டவைகளை வைத்து குழந்தைகளை கவரும் விதமாக கடை அமைக்கப்பட்டிருந்தது.