தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/படிவங்கள் பயணம்

படிவங்கள் பயணம்

படிவங்கள் பயணம்


ADDED : மார் 18, 2024 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2024 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓட்டுச் சாவடி களில் பயன்படுத்தப் படும் படிவங்கள் திருப்பூருக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இவை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 2,520 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வரும் ஏப்., 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்கள், படிப்படியாக திருப்பூருக்கு வந்துகொண்டிருக்கின்றன.

கலெக்டர் அலுவலக தரைதளத்தில் உள்ள பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கில், தேர்தல் பொருட்கள், அரசு அலுவலர்களால் தொகுதி பிரித்து, அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

வேட்பாளர்களின் முகவர்கள் நியமன கடிதம், அடையாள அட்டைக்கான படிவம், ஓட்டுப்பதிவு துவங்குவதற்கான படிவம், வாக்காளர் உறுதி மொழி படிவம், தேர்தல் நிறைவடைந்ததற்கான படிவம் உள்பட ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தும் பல்வேறு படிவங்கள், தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்திலிருந்து நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்ல டம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை தொகுதிகளுக்கான படிவங்களை, அந்தந்த தாலுகா அலுவலர்கள், வாகனங்களில் வந்து, எடுத்துச்சென்று, தேர்தல் பிரிவில் வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us