/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுமியிடம் அத்துமீறிய வளர்ப்பு தந்தைக்கு சிறை
/
சிறுமியிடம் அத்துமீறிய வளர்ப்பு தந்தைக்கு சிறை
ADDED : ஜன 20, 2024 02:41 AM
திருப்பூர்;தாராபுரத்தில் ஏழு வயது வளர்ப்பு மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு, 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தாராபுரம் பகுதியைசேர்ந்த 40 வயதுடைய கூலி தொழிலாளி,ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்த ஒரு பெண்ணுடன் சேர்ந்து வசித்து வந்தார்.
முதல் கணவருடன் குடும்பம் நடத்தியதில், அப்பெண்ணுக்கு, 7 வயது மகள் உள்ளார்.இந்நிலையில், வளர்ப்பு தந்தையாக இருந்த கூலி தொழிலாளி சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதையறிந்து, அதிர்ச்சியடைந்த பெண், தாராபுரம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அந்நபரைக் கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் நீதிபதி பாலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், 2,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானார்.