ADDED : நவ 17, 2025 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி அடுத்த நாதம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் செல்லும் வழியில் 20க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் உடுத்த மாற்று உடையின்றி சிரமப்பட்டு வந்தனர்.
இவர்களின் நிலை அறிந்த, மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை நிறுவனர் லீலா மற்றும் உறுப்பினர்கள் புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என 20 குடும்பங்களாக வசிக்கும் 100 பேருக்கு உடைகள், உணவுகள் வழங்கினர்.

