/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அறக்கட்டளை ஊக்கத்தொகை
/
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அறக்கட்டளை ஊக்கத்தொகை
ADDED : ஜூன் 21, 2025 12:10 AM

அவிநாசி: அவிநாசி அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் விளையாட்டு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி அவிநாசி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று நடந்தது.
துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். 2023--24 மற்றும் 2024--25ம் கல்வி ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைபெற்ற மாணவ, மாணவியருக்கு 5000 ரூபாய், 3000 ரூபாய், 2000 ரூபாய் என்ற வகையில் மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, பேராசிரியர் பழனிச்சாமி, செயலாளர் நடராசன், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.