/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விகாஸ் வித்யாலயாவில் நிறுவனர் தின விழா
/
விகாஸ் வித்யாலயாவில் நிறுவனர் தின விழா
ADDED : ஜூலை 24, 2025 11:29 PM

திருப்பூர்; திருப்பூர், கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனர் நாள் விழா கொண்டாடப்பட்டது.
விகாஸ் வித்யாலயா கல்விக்குழுமங்களின் நிறுவனரான பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அவர் பேசுகையில், ''மாணவ, மாணவியர் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றி, வாழ்வில் நல்ல முன்னேற்றம் காண வேண்டும்,'' என்றார்.
முன்னதாக, பள்ளியின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து விளக்கப்பட்டது. மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக சக்கரவர்த்தி பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் அருள்செல்வம், அனு பிரனேஷ், வியனா, சுலோசனா ஈவன்ட் மேனேஜ்மென்ட் ஜனார்த்தனன் ஆகியோர் பேசினார். பள்ளி பொருளாளர் ராதா, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலர் சிவப்பிரியா, ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.