/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி
/
சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி
ADDED : பிப் 03, 2024 11:46 PM

திருப்பூர்;சீட்டு நடத்தி, 30 லட்சம் ரூபாயை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர், கருமாரம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பாளையக்காட்டில் உள்ள சின்ன குழந்தையப்பாநகரில் வசித்து வந்த ஒரு பெண்ணிடம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு தவணைகளாக சீட்டு சேர்ந்தனர்.
பணத்தை, அவரின் மகளின் வங்கி கணக்குக்கு செலுத்தினோம். திடீரென பணத்தை கொடுக்காமல் பெண் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து அவரது மகள், மருமகனிடம் கேட்டால், பணத்தை தர மறுக்கின்றனர். எனவே, சீட்டு நடத்தி, 30 லட்சம் ரூபாயை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.