/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாலிபரிடம் ரூ.18.90 லட்சம் ஏமாற்றிய மோசடி கும்பல்
/
வாலிபரிடம் ரூ.18.90 லட்சம் ஏமாற்றிய மோசடி கும்பல்
ADDED : ஜூலை 01, 2025 11:40 PM
திருப்பூர் ; கிரிப்டோகரன்சியில் கூடுதல் லாபம் என கூறி, வாலிபரிடம், 18.90 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியது. இது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர், முத்தணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர், 32 வயது வாலிபர். சமீபத்தில் இவரது மொபைல் போன் எண், ஒரு வாட்ஸ் அப் குழுவில் சேர்க்கப்பட்டது. அந்த குழுவில் உள்ளவர்கள், சமூக வலைதள சேனல்களுக்கு பணம் செலுத்தி, அதனை குழுவில் பதிவிடுவதன் வாயிலாக, கூடுதலாக பணம் சம்பாறிக்கலாம் என்று பேசி கொண்டிருந்தனர். இதை நம்பிய வாலிபர், அந்த குழுவில் கொடுத்த சில பணிகளை முடித்து, தொகையை பெற்றார்.
இதனையடுத்து, டெலிகிராம் குழுவில் இணைக்கப்பட்டார். குழுவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியிருந்தனர். இதனை நம்பிய வாலிபர், பல்வேறு வங்கி கணக்கு, யு.பி.ஐ., ஐடிகளுக்கு, 14 பரிவர்த்தனை வாயிலாக, 18.90 லட்சம் ரூபாய் அனுப்பினார்.
அதற்கான லாபத்தை எடுக்க முயன்ற போது, மேலும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டுமென தெரிவித்தனர். ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.