/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புற்றுநோய் கண்டறிய பரிசோதனை 28ம் தேதி இலவசமாக நடக்கிறது
/
புற்றுநோய் கண்டறிய பரிசோதனை 28ம் தேதி இலவசமாக நடக்கிறது
புற்றுநோய் கண்டறிய பரிசோதனை 28ம் தேதி இலவசமாக நடக்கிறது
புற்றுநோய் கண்டறிய பரிசோதனை 28ம் தேதி இலவசமாக நடக்கிறது
ADDED : செப் 25, 2025 12:14 AM
திருப்பூர்: கோவை கே.எம்.சி.ெஹச்., மருத்துவமனை சார்பில், திருப்பூரில், புற்றுநோய் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் இலவசமாக நடத்தப்படுகிறது.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வரும், 28ம் தேதி காலை, 9:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம் நடக்கிறது. இதில், ரத்த சர்க்கரை அளவு, கர்ப்பப்பை வாய் பரிசோதனை, மார்பக பரிசோதனை உள்ளிட்டவை, மருத்துவரின் பரிந்துரைப்படி இலவசமாக மேற்கொள்ளப்படும்.
இம்முகாமில் மார்பகத்தில் கட்டி, வலி, நாள்பட்ட மாதவிடாய் தொந்தரவு, அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல், மலச்சிக்கல், மலத்தில் ரத்தம், பசியின்மை, உணவு விழுங்குவதில் சிரமம் அல்லது வலி, கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய், அடி வயிற்றில் கட்டி, குரலில் திடீர் மாற்றம், திடீர் எடைக்குறைவு, ஆறாத வாய்ப்புண், கழுத்தில் வீக்கம், கட்டி உள்ளிட்ட பிரச்னை உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
முகாமில், பங்கேற்பவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் பிற பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் கே.எம்.சி.ெஹச் மருத்துவமனையில் சலுகை கட்டணத்தில் வழங்கப்படும். இலவச மருத்துவ ஆலோசனை முகாமுக்கு வரும் போது, பழைய மருத்துவ பதிவுகள், எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் மருந்து சீட்டுகளை எடுத்து வர வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, 73393 33485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கோவை கே.எம்.சி.ெஹச்., மருத்துவமனை சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.