/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி; உடுமலையில் நாளை துவக்கம்
/
குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி; உடுமலையில் நாளை துவக்கம்
குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி; உடுமலையில் நாளை துவக்கம்
குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி; உடுமலையில் நாளை துவக்கம்
ADDED : ஜூலை 23, 2025 09:07 PM
உடுமலை; மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், குரூப் - 2, குரூப் - 2ஏ தேர்வு எழுதுவோருக்கான இலவச பயிற்சி வகுப்புகள், உடுமலை மையத்தில் நாளை முதல் துவங்குகின்றன.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பயிற்சி மையங்கள், கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் குண்டடம், உடுமலை ஆகிய மூன்று இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வு எழுதுவோருக்கு, இலவச பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் நிலை -2, முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர், மொத்தம் 645 காலி பணியிடங்களுக்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு, வரும் செப்., 28ல் நடைபெற உள்ளது.
இதனையடுத்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி மையங்களில், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
கலெக்டர் அலுவலக ஏழாவது தளத்திலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்த பயிற்சி மையத்தில், நேற்றுமுன்தினம் முதல் பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், உடுமலையில், எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில், நாளை (25ம் தேதி) காலை, 10:30 மணியளவில் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன.
இப்பயிற்சியின்போது, மாதம் இருமுறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 0421 299152, 94990 55944 என்கிற எண்களிலோ தொடர்புகொண்டு, பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.