/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச நாட்டு நாய்க்குட்டி நாளை முகாம்
/
இலவச நாட்டு நாய்க்குட்டி நாளை முகாம்
ADDED : அக் 05, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட பிராணிகள் துயர் துடைப்பு சங்கம் (எஸ்.பி.சி.ஏ.,) சார்பில், நாளை மாலை, 5:00 முதல், 6:30 மணி வரை, முகாம் நடக்க உள்ளது.
வீட்டில் செல்ல பிராணிகள் வளர்க்க ஆர்வம் உள்ளவர்களுக்கு, முகாமில், நாட்டு நாய்க்குட்டிகள் இலவசமாக வழங்கப்படும். பார்க் ரோடு, புனித வளவனார் மேல்நிலைப்பள்ளி அருகே முகாம் நடக்க உள்ளது. நாய் வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்று, இலவசமாக நாட்டு நாய்க்குட்டிகள் பெற்றுக்கொள்ளலாம். நன்றாக வளர்த்து, பராமரிப்பவர்களுக்கு, அடுத்த ஆண்டு, ஊக்கப்பரிசு வழங்கப்படும்.