/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச காது பரிசோதனை முகாம் 'மெட் ெஹல்ப்'-ல் இன்று துவக்கம்
/
இலவச காது பரிசோதனை முகாம் 'மெட் ெஹல்ப்'-ல் இன்று துவக்கம்
இலவச காது பரிசோதனை முகாம் 'மெட் ெஹல்ப்'-ல் இன்று துவக்கம்
இலவச காது பரிசோதனை முகாம் 'மெட் ெஹல்ப்'-ல் இன்று துவக்கம்
ADDED : ஜூலை 01, 2025 12:23 AM

திருப்பூர், அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப், கீதா பார்மஸி அருகில் 'மெட்ஹெல்ப்' காது பரிசோதனை மையம் செயல்படுகிறது. தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, இன்று துவங்கி வரும், 6ம் தேதி வரை இலவச காது பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. மருத்துவமனை ஒலியியல் நிபுணர் டாக்டர் ராம் கார்த்திக் கூறியதாவது:
உலகளவில் செவித்திறன் குறைபாடால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கின்றனர். வயதானவர்கள், வயது மூப்பு காரணமாக செவித்திறன் இழப்பது இயல்பு. இன்றைய இளம், நடுத்தர வயதினர், 'ஹெட்போன், ஹெட்செட், இயர் பட்ஸ் போன்ற கருவிகளை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர்.
இது காலத்தின் கட்டாயம் என்றாலும், இதுபோன்ற கருவிகளை அதிகம் பயன்படுத்துவது செவித்திறனை கடுமையாக பாதிக்கும்.
இதற்கு ஆலோசனை மற்றும் நிரந்தர தீர்வு அளிக்கும் விதமாக, எங்கள் பரிசோதனை மையத்தில், இன்று முதல், 6ம் தேதி வரை, இலவச காது பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முகாமில், உங்களிடம் உள்ள பழைய காது கேட்கும் கருவிகளை 'எக்ஸ்சேஞ்ச்' அடிப்படையில் புதிய கருவிகளாக மாற்றிக் கொள்ளலாம். புதிய கருவி வாங்கினால், 10 - 20 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 'புளூடூத்' மற்றும் 'ரீசார்ஜ்' செய்யக்கூடிய காது கருவிகள், அதிநவீன செவித்திறன் நோய் கண்டறியும் வசதியும் எங்களிடம் உண்டு. மேலும் தொடர்புக்கு, 90431 77951, 99443 50949 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.