ADDED : ஏப் 11, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகாடமி நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, டிப்ளமோ ஆரி எம்ப்ராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடும் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும். மொத்தம் 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். தங்கி படிக்கும் வசதி உள்ளது. www.tahdco.com என்கிற தாட்கோ தளத்தில் விண்ணப்பிக்கலாம்.