/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமுருகன்பூண்டியில் 10ல் இலவச கண் சிகிச்சை முகாம்
/
திருமுருகன்பூண்டியில் 10ல் இலவச கண் சிகிச்சை முகாம்
திருமுருகன்பூண்டியில் 10ல் இலவச கண் சிகிச்சை முகாம்
திருமுருகன்பூண்டியில் 10ல் இலவச கண் சிகிச்சை முகாம்
ADDED : ஆக 07, 2025 11:29 PM
அவிநாசி; திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், திருமுருகன்பூண்டி சுவாமி விவேகானந்தா சேவா சங்கம், பூர்ண சேவை ஆயுர்வேத மருத்துவமனை மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து, வரும் 10ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.
திருமுருகன்பூண்டியிலுள்ள சரஸ்வதி வித்யா மந்திர் (அன்பு இல்லம்) பள்ளி வளாகத்தில், அன்று காலை, 8:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.
கண்புரை உள்ள நோயாளிகளுக்கு அன்று மதியமே, கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். கண்புரை உள்ளவர்கள், ஆதார் கார்டு நகல், இருதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா இருந்தால், அதற்கான மருத்துவ சான்றிதழ் கொண்டு வேண்டும். முகாம் தொடர்பான விவரங்களுக்கு, 99434 84242, 76289 31101.