/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலவச வீட்டுமனை பட்டா ரத்தாகிறது
/
இலவச வீட்டுமனை பட்டா ரத்தாகிறது
ADDED : ஏப் 03, 2025 05:41 AM
திருப்பூர்; திருப்பூர் தெற்கு தாலுகா, கண்டியன் கோவில் கிராமம், க.ச.எண். 438/1பி-ல், ஆதி திராவிடர் நலத்துறை வாயிலாக, 1.04 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
தமிழ்நிலம் மென்பொருளில் இலவச வீட்டு மனை பட்டா பெற்ற பயனாளிகளை இணைய வழி பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
கண்டியன் கோவிலில், கடந்த 2021, ஜன., 13ல் பட்டா பெற்ற பயனாளிகளில் 20 பேர், குறிப்பிட்ட இடத்தில் வசிக்காதது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
கண்டியன் கோவிலில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் குறித்து கள ஆய்வு நடத்தப்பட்டது. பட்டா பெற்றவர்களில் 20 பேர், குறிப்பிட்ட மனையிடங்களில் வசிக்கவில்லை.
இது தொடர்பாக அறிவிப்பு அளித்தும், இன்னும் எந்த விண்ணப்பமும் அளிக்கவில்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டி குடியிருக்காமல் நிபந்தனையை மீறியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் 15 நாட்களுக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ அணுகி விளக்கம் அளிக்கவேண்டும். இல்லாத பட்சத்தில், பட்டா ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.