ADDED : அக் 24, 2024 11:57 PM
அ நிறம் | அளவு
மா.கம்யூ., மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் அறிக்கை:
திருப்பூர், குமரன் ரோட்டில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட பல அடுக்கு வாகன பார்க்கிங் வளாகம் பல மாதமாக திறக்கப்படாமல் உள்ளது. தற்போது, தீபாவளி நெரிசலுக்காக, தற்காலிகமாக இதை மாநகராட்சி நிர்வாகம் திறப்பதாகவும், வாகனங்களுக்கு மணிக்கணக்கில் கட்டணமும் நிர்ணயித்துள்ளது.
இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. தற்போது தற்காலிக ஏற்பாடு என்று துவங்கி, அதை நிரந்தரமாக்கும் திட்டம் என்றே மா.கம்யூ., கருதுகிறது. தீபாவளி நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என்றால் இந்த வளாகத்தை இலவசமாக பார்க்கிங் செய்ய அனுமதிக்க வேண்டும்.
