தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு

இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு

இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு


ADDED : ஜூலை 30, 2025 10:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 10:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்; தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழகம் முழுவதும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், காங்கயம், உடுமலை ஆகிய மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் தலா மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் மூலம், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி; சென்னிமலையில் உள்ள பொது நுாலகம்; உடுமலை, தளி ரோட்டிலுள்ள கிளை நுாலகம் ஆகியவற்றில், திருக்குறள் பயிற்சி வகுப்புகள், ஆக., இரண்டாவது வாரம் முதல் நடைபெற உள்ளன.

முற்றிலும் இலவசமான இப்பயிற்சி வகுப்புகள், வாரந்தோறும் சனிக்கிழமை, மதியம், 2:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடைபெறும். ஆண்டுக்கு 30 வகுப்புகள் நடத்தப்பட்டு, பயிற்சி முடித்தவர்களுக்கு பங்கேற்புச் சான்று வழங்கப்படும்.

பங்கேற்க விரும்புவோர், சுய விவரத்துடன், ஆதார் நகல் இணைத்து, ddtamil607@gmail.com என்கிற இ-மெயிலிலும்; கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண்: 608ல் இயங்கும் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்துக்கு தபாலிலும் அனுப்பிவைக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, 93614 61882, 87606 06234 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us