ADDED : ஜூலை 18, 2025 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் நிலை -2, முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் மொத்தம் 645 காலி பணியிடங்களுக்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு, வரும் செப். 28ல் நடைபெற உள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக நான்காவது தளத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், குரூப் - 2, 2ஏ, முதல்நிலை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வரும் 21ம் தேதி முதல் துவங்குகின்றன.
இப்பயிற்சியின்போது, மாதம் இருமுறை மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 0421 299152, 94990 55944 என்கிற எண்களில் தொடர்புகொண்டு, பதிவு செய்யலாம்.