ADDED : அக் 26, 2025 08:45 PM
உடுமலை: தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யில், கிராமப்புற இளைஞர்களுக்கு, தோட்டக்கலை மற்றும் நிலத்தோற்ற வடிவமைப்பில், திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், வேளாண் பல்கலை., யின், தொழில்நுட்ப வணிக காப்பகம், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் சார்பில் இப்பயிற்சி நடைபெற உள்ளது.
தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: இப்பயிற்சி, 25 நபர்களுக்கு, 26 நாட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்க, வயது வரம்பு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சியில், தோட்ட பராமரிப்பு மற்றும் நிலத்தை அழகுபடுத்துவதில் நேரடி பயிற்சி; தாவர பராமரிப்பு மற்றும் வடிவமைப்பு குறித்த நடைமுறை அமர்வுகள், நாற்றங்கால் நுட்பங்கள் மற்றும் புல்வெளி அமைப்பு குறித்த வெளிப்பாடு, தமிழ்நாடு வேளாண் பல்கலை., நிபுணர்களின் வழிகாட்டுதல், பயிற்சி சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வழிகாட்டுதல் வழங்கப்படும். பயிற்சி வரும் 30ம் தேதி துவங்குகிறது. விபரங்களுக்கு, 91422-2969378 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்தனர்.

