/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பாஸ்ட் புட்' தயாரிப்பு இலவச பயிற்சி
/
'பாஸ்ட் புட்' தயாரிப்பு இலவச பயிற்சி
ADDED : ஜூலை 15, 2025 10:37 PM
திருப்பூர்; முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியில் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், 'பாஸ்ட்புட்' தயாரிப்பு இலவச பயிற்சி இன்று (16ம் தேதி) துவங்குகிறது.
பானிபூரி, சேவ் பூரி, கச்சோரி, ரோஸ்மில்க், ஆனியன் பக்கோடா, புலாவ், டூடுல்ஸ், பர்கர், சான்ட்விச், சமோசா, கோபி சில்லி, சில்லி சிக்கன், பிரைட் ரைஸ் உள்பட பல்வேறுவகை துரித உணவு தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடிப்போருக்கு, மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 94890 43923, 90804 42586 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம், என கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தினர் அறிவித்துள்ளனர்.