/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி
/
இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி
ADDED : ஜூன் 19, 2025 05:43 AM
திருப்பூர், : திருப்பூர் மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், உண்டு, உறைவிட வசதியுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இம்மையத்தில், வேலைவாய்ப்பு அதிகம் வழங்கும், மொபைல்போன் பழுது நீக்கம், வீட்டு உபயோக பொருட்கள் பழுதுநீக்கம், கான்கிரீட் கொத்தனார் பயிற்சி, பிளம்பிங், தச்சு, டூவீலர் மெக்கானிக், ஒயரிங், வெல்டிங் உள்பட 64 வகை பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
எட்டாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., - டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10 நாட்கள்; அதிகபட்சம் 45 நாட்கள் வரையிலான பயிற்சி காலத்தில், மதிய உணவு, காலை மற்றும் மாலை உணவு, தேநீர் மற்றும் பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புற இளைஞர்கள், தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் இணைந்து பயன்பெற கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் விவரங்களுக்கு, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தை, 94440 94395 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.