தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வெல்டிங் இலவச பயிற்சி

வெல்டிங் இலவச பயிற்சி

வெல்டிங் இலவச பயிற்சி


ADDED : அக் 18, 2025 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2025 11:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் அறிக்கை:

திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும், ஊராட்சி, கிராமங்களில் வாழும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு, மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய, வெல்டிங் அண்ட் பேப்ரிகேஷன் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. எழுத படிக்க தெரிந்த, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, இருபாலரும் விண்ணப்பிக்கலாம். முப்பது நாள் முழு நேரம் நடக்கும் பயிற்சிக்கு நேர்காணல் வரும், 24ம் தேதி நடக்கிறது.

இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி ஏற்படுத்தி தரப்படும்; உணவு இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க,' கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், 335/பி1, வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, திருப்பூர் - 641606' என்ற முகவரிக்கு நேரில் வரவும். கூடுதல் தகவல்களுக்கு 94890 - 43923, 99525 - 18441 என்ற மொபைல் போன் எண்ணில் அழைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us