தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இலவச ஒயரிங் பயிற்சி நாளை நேர்காணல்

இலவச ஒயரிங் பயிற்சி நாளை நேர்காணல்

இலவச ஒயரிங் பயிற்சி நாளை நேர்காணல்


ADDED : செப் 01, 2025 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2025 12:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்; திருப்பூர் - காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவில் செயல்படும் கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், கிராமப்புறங்களில் வசிப்போருக்கு, இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வீடுகளில் ஒயரிங் செய்வது குறித்த ஒரு மாத பயிற்சி வகுப்பு விரைவில் துவங்க உள்ளது. இதற்கான நேர்காணல், நாளை (2ம் தேதி) நடக்கிறது; 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கட்டணம் கிடையாது.

ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே தங்கும் விடுதி வசதி உள்ளது. பயிற்சி நாட்களில் காலை மற்றும் மாலையில் டீ, உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிப்போருக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்குப்பிறகு கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 94424 13923, 99525 18441, 90804 42586 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us