/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுதந்திர போராட்ட வீரர் பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை
/
சுதந்திர போராட்ட வீரர் பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை
ADDED : அக் 25, 2024 09:50 PM

உடுமலை : உடுமலை குருவப்பநாயக்கனுாரைச்சேர்ந்த, சுதந்திர போராட்ட வீரர் சர்தார் வேலப்பநாயுடு, பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
ஆங்கிலேய அரசை எதிர்த்து, பதவி வகித்து வந்த தாலுக்கா போர்டு அங்கத்தினர் பதவியையும், கிராம முனிசீப் பதவியையும் ராஜினாமா செய்தார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
1942ல், ஆகஸ்ட் புரட்சியின் போது, இரு ஆண்டுகள் அலிப்புரம் சிறையில் அடைபட்டிருந்தார். சுதந்திர போராட்ட தியாகியான அவரது பிறந்த நாளான நேற்று, உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
அமைச்சர் கயல்விழி, எம்.பி., ஈஸ்வரசாமி, ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி, நகரச்செயலாளர் வேலுசாமி, நகரத்தலைவர் மத்தீன் மற்றும் குருவப்ப நாயக்கனுார் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.