/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுதந்திர போராட்ட வாரிசுகள் கூட்டமைப்பு உருவானது
/
சுதந்திர போராட்ட வாரிசுகள் கூட்டமைப்பு உருவானது
ADDED : மே 05, 2025 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடந்தது. பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் ஒருங்கிணைப்பு குழு கவுரவ தலைவராக கண்ணன்; தலைவராக நடராஜன்; பொது செயலாளர் ஞானவேல், துணை தலைவர்களாக வரதன், பெருமாள், தியாகராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சட்ட ஆலோசகர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.அமைப்பு சார்பில் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டர்களைச் சந்தித்து சுதந்திர போராட்ட வீரர் குடும்பங்களின் தேவைகள் குறித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.