/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிரான்ஸ்பார்மர் மீது மோதி சரக்கு வாகனம் எரிந்தது
/
டிரான்ஸ்பார்மர் மீது மோதி சரக்கு வாகனம் எரிந்தது
ADDED : ஜூலை 29, 2025 11:50 PM

வெள்ளகோவில்; விபத்தை தடுக்க பிரேக் போட்ட டிரைவர், சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து டிரான்ஸ்பார்மர் மீது மோதி தீயில் கருகியது.
ஈரோடு, கருப்பண்ணன் கோவில் வீதியை சேர்ந்தவர் இன்சாப்தீன், 63. இவர் பட்டுகோட்டையில் இருந்து திருப்பூர் அருகே உள்ள பிஸ்கெட் கம்பெனிக்கு செல்வதற்காக சரக்கு வாகனத்தை ஓட்டி கொண்டு வந்தார்.
நேற்று மதியம் 2.30 மணிக்கு, வெள்ளகோவில் அருகே காடையூரான் வலசு பிரிவு அருகே,டூவீலர் ஒன்று குறுக்கே வந்தது. விபத்தை தடுக்க டிரைவர் பிரேக் அடித்தார். கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், ரோட்டோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து சென்ற காங்கயம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விபத்து ஏற்பட்ட உடனே, டிரைவர் இறங்கிய காரணத்தால், உயிர் தப்பினர். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.