/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்கள்
/
நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்கள்
ADDED : டிச 19, 2024 11:44 PM
உடுமலை; தேசிய நெடுஞ்சாலையில், விதிமுறை மீறி சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையான உடுமலை - பழநி ரோட்டில், நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்துகளை கட்டுப்படுத்தவும், ரோடு விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
வாகனங்கள் சீராக செல்வதற்கு, தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட ரோட்டின் பாதி வரை, சரக்கு வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன.
ரோட்டோரத்திலுள்ள தனியார் வணிக நிறுவனங்கள் மற்றும் தினசரி சந்தையில் காய்கறி உள்ளிட்ட சரக்குகளை இறக்குவதற்கு, லாரிகளும் பாதி ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
போக்குவரத்து போலீசார் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பது, மக்களுக்கு இன்னலை ஏற்படுத்துகிறது. அனுமதியில்லாமல் விதிமுறை மீறி, நிறுத்தப்படும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.