
தெருநாய் தொல்லை
மண்ணரை, சத்யா காலனியில் அதிக தெருநாய்கள் உலவுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
- சதீஷ்குமார், மண்ணரை.
குப்பை எரிப்பு
கல்லம்பாளையம் - நத்தக்காடு ரோட்டில் குப்பைகளை எரிப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
- ராஜ், நத்தக்காடு.
வேகத்தடை இல்லை
மின் மயானம் - அணைக்காடு ரோடு, முதல் ரயில்வே கேட் பிரிவில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்படுகின்றன.
- ராமச்சந்திரன், பாளையக்காடு.
பச்சை நிறமே...
பி.என்.ரோடு, காமராஜ் நகர், முதல் வீதியில் குப்பை சரியாக எடுக்காததால் பச்சை நிறத்தில் சாக்கடை நீர் ஓடுகிறது.
- காஞ்சனா, காமராஜ் நகர்.
பார்க்கிங் இடையூறு
நடராஜா தியேட்டர் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
- வின்சென்ட் ராஜ், ராயபுரம்.
மக்கள் அவதி
தாராபுரம் ரோடு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன், நடைபாதையை ஆக்கிரமித்தும், மதுபோதையில் விழுந்தும் கிடப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சுரேஷ், தாராபுரம் ரோடு, திருப்பூர்.
ரியாக்ஷன்
துார்வாரப்பட்டது
பல்லடம் கரைப்புதுார், மீனாம்பாறை மற்றும் நொச்சிபாளையம் பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் கால்வாய் துார்வாரப்பட்டது.
- செல்வராஜ், மீனாம்பாறை

