/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சந்தைக்கு வரும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
/
சந்தைக்கு வரும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
சந்தைக்கு வரும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
சந்தைக்கு வரும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 19, 2025 07:44 AM
உடுமலை: உடுமலை ராஜேந்திரா ரோட்டில், சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமிப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உடுமலை தினசரி சந்தைக்கு செல்வதற்கு, ராஜேந்திரா ரோடு மட்டுமே பிரதான வழியாக இருப்பதால், சரக்கு வாகனங்கள் அவ்வழியை பயன்படுத்துகின்றனர். இதனால் சந்தைக்கு வரும் அந்த வாகனங்கள், அந்த ரோட்டையும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
காலையிலும், மாலையிலும் சந்தைக்கு காய்கறி மற்றும் இதர பொருட்கள் ஏற்றி வரும் இந்த வாகனங்கள், வரிசையாக சந்தை வளாகத்திற்குள் நுழைவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. இதனால், அப்பகுதியில் மற்ற வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
மேலும், பணிக்கு செல்வோர், கல்லுாரி, பள்ளிக்கு செல்வோரும் காலை, மாலை நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி வருகிறது.
பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா வரை, வாகனங்கள் வரிசை கட்டும் வகையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.