/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடிக்கடி மின்வெட்டு தவிக்கிறது மங்கலம்
/
அடிக்கடி மின்வெட்டு தவிக்கிறது மங்கலம்
ADDED : பிப் 20, 2025 05:49 AM
திருப்பூர்; மங்கலம் சுற்றுப்பகுதி களில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதை தடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட மங்கலம் சுற்றுப்பகுதியில், கடந்த ஒரு வாரமாக, ஒரு சில இடங்களில் மட்டும், அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லுாரிக்கு புறப்படும் காலை நேரம் அல்லது இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்படுகிறது.
தடையின்றி மின்சாரம் வினியோகிக்கப்பட வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பொதுத்தேர்வு நேரம் என்பதால், மாதாந்திரமின்பராமரிப்பு நடக்கவில்லை; எதிர்பாராத பழுது ஏற்படும் போது மின்வினியோகம் தடைபடுகிறது; அதுவும் உடனுக்குடன் சரிசெய்துவிடுவதாக, மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'மங்கலம் பகுதிகளில், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது; அரைமணி நேரம் வரை மின்சாரம் இல்லாததால், மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராவது பாதிக்கிறது. தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,' என்றனர்.

