/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யலில் புது வெள்ளம்; நீரில் உப்பு அளவு குறைந்தது
/
நொய்யலில் புது வெள்ளம்; நீரில் உப்பு அளவு குறைந்தது
நொய்யலில் புது வெள்ளம்; நீரில் உப்பு அளவு குறைந்தது
நொய்யலில் புது வெள்ளம்; நீரில் உப்பு அளவு குறைந்தது
ADDED : நவ 11, 2024 05:33 AM
திருப்பூர் : வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது; கோவை மாவட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கடந்த 10 நாட்களுக்கு மேலாக, நொய்யலில் மிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தண்ணீரில் உள்ள மொத்தமாக கரைந்துள்ள உப்பு (டி.டி.எஸ்.,) குறைந்துள்ளது. வழக்கமாக, 900 முதல், 1,200 வரை இருக்கும் டி.டி.எஸ்., அளவு, தற்போது, 500 முதல் 600 ஆக குறைந்துள்ளது.
வேர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சந்தீப் கூறுகையில், ''மூளிக்குளம் வரும் தண்ணீர் அளவு, காசிபாளையம் பகுதி, அணைக்காடு பகுதி மற்றும் ஒரத்துப்பாளையம் பகுதிகளிலும், அடிக்கடி தண்ணீர் மாதிரி எடுத்து ஆய்வு செய்கிறோம்.
கனமழை பெய்து, மழை வெள்ளம் ஓடிக்கொண்டிருப்பதால்,டி.டி.எஸ்., அளவு குறைந்துள்ளது'' என்றார்.