/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.50 மாமூல் ரூ.200 ஆக ஏறிப்போச்சு...
/
ரூ.50 மாமூல் ரூ.200 ஆக ஏறிப்போச்சு...
ADDED : பிப் 07, 2024 11:31 PM
பொங்கலுார் : விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் பிரிக்க முடியாது. விவசாயம் பொய்க்கும் காலங்களில் கால்நடை வளர்ப்பே விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றுகிறது.
விவசாயிகள் தங்களிடம் உபரியாக இருக்கும் இளம் கன்றுகள், வயதான மாடுகளை சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். அவர்கள், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சந்தைகளில் பெரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
அவற்றை வாங்கும் வியாபாரிகளில் பெரும்பாலோர் கேரளாவுக்கு மாமிசத்துக்காக கொண்டு செல்கின்றனர். இவற்றில் பெரும் பகுதி கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாகவே செல்கிறது. அவிநாசிபாளையம் சுங்கத்தில் போலீசார் கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களை இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். வசூலுக்கு தனியாக ஒருவரை நியமித்துள்ளனர்.
ஒவ்வொரு வாகனத்திற்கும், 200 ரூபாய் மாமூல் வசூலிக்கின்றனர். இதேபோல காங்கேயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.
சில மாதம் முன் ஒரு ஸ்டேஷனுக்கு, 50 ரூபாயாக இருந்த மாமூலை, 200 ரூபாயாக உயர்த்தி விட்டனர். வியாபாரிகள் போலீசாருக்கு மாமூல் கொடுப்பதற்காக, விவசாயிகளிடம் மாட்டின் விலையை குறைத்து வாங்குகின்றனர். இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

