/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரன்ட்லைன் அகாடமி ஒட்டுமொத்த சாம்பியன்
/
பிரன்ட்லைன் அகாடமி ஒட்டுமொத்த சாம்பியன்
ADDED : ஆக 21, 2025 09:43 PM

திருப்பூர்; திருப்பூர் தெற்கு குறுமைய விளையாட்டுப்போட்டிகள், சர்க்கார் பெரியபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தன. இதில், குழு விளையாட்டுப்போட்டிகளில் தி பிரன்ட்லைன் அகாடமி பள்ளி மாணவ, மாணவியர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
இறகுப்பந்து, கோகோ உள்பட பல்வேறு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றனர். தடகளப்போட்டிகளில் மாணவர் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். 19 வயதினர் பிரிவில் முகமது சல்மான் 100மீ., 200மீ., குண்டு எறிதல் போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்றார். அதேபிரிவில் மனோஜ்குமார் 800மீ., 1,500மீ., 3,000 மீ., போட்டிகளில் முதலிடம்; 17 வயதினர் பிரிவில் சிவமூர்த்தி 100மீ., நீளம் தாண்டுதல், மும்முனை தாண்டுதலில் முதலிடம் பெற்றார். மூவரும் தனி நபர் சாம்பியன் பட்டமும் வென்றனர்.
மாணவியர் தடகளப்போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தில் இரண்டாமிடம் பெற்றனர். வெற்றி பெற்றோரையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், இணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன், முதல் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.