/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரன்ட்லைன், சதுரங்க சர்க்கிள் இணைந்து செஸ் போட்டிகள்
/
பிரன்ட்லைன், சதுரங்க சர்க்கிள் இணைந்து செஸ் போட்டிகள்
பிரன்ட்லைன், சதுரங்க சர்க்கிள் இணைந்து செஸ் போட்டிகள்
பிரன்ட்லைன், சதுரங்க சர்க்கிள் இணைந்து செஸ் போட்டிகள்
ADDED : ஆக 18, 2025 10:38 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட சதுரங்க சர்க்கிள் பிரன்ட்லைன் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் இணைந்து முதலாம் ஆண்டு சதுரங்கப் போட்டியை நடத்தின. 325 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
பள்ளி தாளாளர் சிவசாமி, சதுரங்க சர்க்கிள் தலைவர் சக்திநந்தன், செயலாளர் உமாபதி, பொருளாளர் ேஹமலதா, பள்ளி இணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் ஆகி யோர் போட் டியை துவக்கி வைத்தனர். திருப்பூர் மாவட்ட இளையோர் சதுரங்க மாணவர்கள் யாழிசை, மஹதி, கோகுல்கிருஷ்ணன் ஆகியோர் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 9, 12, 16 வயதினருக்கு தனித்தனிப் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற 120 மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பொதுப்பிரிவில் மொத்தம் 15 பரிசுகள் மற்றும் 13, 600 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பள்ளி நிர்வாகிகள், திருப்பூர் ரோட்டரி கிளப் தலைவர் ரவி ஆகியோர் பங்கேற்று பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர் .

