ADDED : அக் 16, 2025 05:54 AM

திருப்பூர்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி ட்ரிக் அகாடமியில் நடந்தது. இதில் பங்கேற்ற தி பிரன்ட்லைன் பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு போட்டிகளில் வென்றனர்.
மாணவர் பிரிவு: ஹரிஹரசுதன் - பட்டர்பிளை ஸ்ட்ரோக் 50மீ., முதலிடம், பிரெஸ்ட் ஸ்ட்ரோக் 50மீ., 2ம் இடம்; யஸ்வந்த் கிருஷ்ணா - பிரெஸ்ட் ஸ்ட்ரோக் 50மீ., 3ம் இடம்; சமந்நந்தன் - ப்ரீ ஸ்டைல் 100மீ., 3ம் இடம், 4 X 25 ப்ரீ ஸ்டைல் 3ம் இடம், 4 X 25 மிட்லே ரிலே 2ம் இடம்; யஸ்வந்த் கிருஷ்ணா, கார்த்தி, சுதன், ரெமோ - 4 X 25 ப்ரீ ஸ்டைல் பர்னீஷ் 2ம் இடம், மிட்லே ரிலே 3ம் இடம் பெற்றனர்.
மாணவியர் பிரிவு: மஹிதாஸ்ரீ ப்ரீ ஸ்டைல் - 50மீ., பேக்ஸ்ட்ரோக் 50மீ, ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் 50மீ., முதலிடம்; ேஹமா - பிரெஸ்ட் ஸ்ட்ரோக் 50மீ., 2ம் இடம்; தயாஸ்ரீ - பேக்ஸ்ட்ரோக் 100 மீ., 2ம் இடம், பட்டர்பிளை 500மீ., 3ம் இடம்; ஹரிணி - ப்ரீ ஸ்டைல் 50மீ., பிரெஸ்ட் ஸ்ட்ரோக் 50 மீ., 2ம் இடம்; அனுஸ்ரீ - ப்ரீ ஸ்டைல் 100மீ., முதலிடம், பேக்ஸ்ட்ரோக், ப்ரீ ஸ்டைல் 100மீ., 3ம் இடம்; சுருதிகா, அனுலேகா, தியாஸ்ரீ, ஹரிணி - 4 X 25 ப்ரீ ஸ்டைல், 4 X 25 மிட்லே ரிலே 2ம் இடம் பெற்றனர். மாவட்ட அளவில் முதலிடத்துக்கு தேர்வானோர், மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதிபெற்றனர்.
வெற்றி பெற்றவர்கள் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்கள் மஞ்சுநாதன், பிரியங்கா ஆகியோரை தாளாளர் சிவசாமி, செசயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், இணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன், முதல்வர் வசந்தராஜ் ஆகியோர் பாராட்டினர்.