ADDED : ஜன 28, 2026 06:42 AM

அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை பகுதியில், மகசூல் குறைந்துள்ளதால், புடலைக்கு, சந்தைகளில் விலை அதிகரித்து வருகிறது.
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு, விளைநிலங்களில் பந்தல் அமைத்து, புடலை, பீர்க்கன், பாகற்காய் உள்ளிட்ட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
வடகிழக்கு பருவமழைக்குப்பிறகு, பந்தல் சாகுபடிகளில் நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், மகசூல் குறைந்துள்ளது. இதனால் சந்தைகளுக்கு வரத்து குறைந்து, புடலை கிலோ, 18 ரூபாயில் இருந்து, 23 ரூபாயாக உயர்ந்துள்ளது.
