/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
1-5 வகுப்பு மாணவர்களுக்கு இன்று முழு ஆண்டுத்தேர்வு நிறைவு
/
1-5 வகுப்பு மாணவர்களுக்கு இன்று முழு ஆண்டுத்தேர்வு நிறைவு
1-5 வகுப்பு மாணவர்களுக்கு இன்று முழு ஆண்டுத்தேர்வு நிறைவு
1-5 வகுப்பு மாணவர்களுக்கு இன்று முழு ஆண்டுத்தேர்வு நிறைவு
ADDED : ஏப் 16, 2025 11:40 PM
உடுமலை; அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வு நிறைவடைகிறது.
கடந்த மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வும், 15ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெற்றன. இந்நிலையில், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வுகள், கடந்த 7ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதியில் 186 துவக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் உள்ளனர். அதில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்றுடன் முழு ஆண்டுத்தேர்வு நிறைவடைகிறது.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்., 24ம்தேதியுடன் நிறைவடைகிறது. அன்றுடன் முழு ஆண்டுத்தேர்வு விடுமுறையும் துவங்குகிறது. மேலும், ஆசிரியர்களுக்கு ஏப்., 30ம்தேதி வரை பணி நாளாகவும் கல்வித்துறை அறிவித்துள்ளது.