/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கனவு இல்லம்' திட்டத்தில் நிதி ஒதுக்கீடு; கட்டுமான பணிகள் தீவிரம்
/
'கனவு இல்லம்' திட்டத்தில் நிதி ஒதுக்கீடு; கட்டுமான பணிகள் தீவிரம்
'கனவு இல்லம்' திட்டத்தில் நிதி ஒதுக்கீடு; கட்டுமான பணிகள் தீவிரம்
'கனவு இல்லம்' திட்டத்தில் நிதி ஒதுக்கீடு; கட்டுமான பணிகள் தீவிரம்
ADDED : ஜூலை 30, 2025 08:22 PM
உடுமலை; அரசின் 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், மூன்று ஒன்றியங்களில், 886 பயனாளிகள், தேர்வு செய்யப்பட்டு, வீடு கட்டுமான பணிகள் தீவிரமடைந்துள்ளது.
தமிழகத்தின் கிராமப்புறங்களில், குடிசைகளுக்கு பதிலாக, கான்கிரீட் வீடுகள் மானியத்தில் கட்ட 'கனவு இல்லம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயனாளிகளுக்கு, ரூ.3.50 லட்சம் மானியமாக வழங்குகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ், குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலை ஒன்றியங்களில், பல முறை விண்ணப்பித்தும், பயனாளிகள் பட்டியல் தேர்வில் இழுபறி நீடித்தது.
கடந்தாண்டு இறுதியில், பயனாளிகள் பட்டியல் தயாராகி, திருப்பூர் மாவட்டத்துக்கு மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், குடிமங்கலம் ஒன்றியம், 304 பயனாளிகளுக்கு, 9.42 கோடி ரூபாயும், மடத்துக்குளம், 236 பயனாளிகள், 7.31 கோடி ரூபாய்; உடுமலை ஒன்றியத்தில், 346 பயனாளிகளுக்கு, 10.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பபட்டது.
இதில், குடிமங்கலம் ஒன்றியத்தில், தற்போது, 136 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆய்வு செய்து, திட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது குறித்து, குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய அதிகாரிகளை வலியுறுத்தினார்.
பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப் பட்ட தொகுப்பு வீடுகள், போதிய பராமரிப்பின்றி இடிந்து வருகிறது; அவற்றை புதுப்பிக்க அரசு உதவவும் கோரிக்கை இருந்து வந்தது.
தற்போது, ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ், குடிமங்கலம் ஒன்றியத்தில், 110 பயனாளிகளுக்கு, ரூ.94.96 லட்சம்; மடத்துக்குளம் ஒன்றியம், 129 பயனாளிகள் ரூ.98.31 லட்சம் உடுமலை ஒன்றியம் 321 பயனாளிகள் ரூ. 2.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொகுப்பு வீடுகளை பழுது பார்த்து புதுப்பிக்க, நபருக்கு 75 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகளை பராமரிக்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.