ADDED : டிச 04, 2024 10:53 PM

திருப்பூர்; திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், 42 வது ஆண்டு அன்னதான விழா நடைபெற உள்ளது.
மகா தீபம் ஏற்றிய பின் திருவண்ணாமலையில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் வக்கீல் அணி அமைப்பாளர் விவேகானந்தன் ஆகியோர், திருவண்ணாமலை சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்கு, 3.70 லட்சம் ரூபாயை, திருவண்ணாமலை சேவா டிரஸ்ட் செயலாளர் சண்முக சுந்தரத்திடம் வழங்கினர். அறக்கட்டளை நிர்வாகிகள் முருகேசன், மோகனசுந்தரம், சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். குண்டடத்தை சேர்ந்த வக்கீல் குமாரவேல், 300 தேங்காய்களை வழங்கினர்.
100 கிலோ துவரம் பருப்பு, ஒரு டின் நெய், ஆயுள் ஐந்து டின், முந்திரி 5 கிலோ, திராட்சை ஐந்து கிலோ, ஏலக்காய் ஒரு கிலோ ஆகிய பொருட்கள் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.