ADDED : பிப் 03, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: ஊத்துக்குளி அடுத்த சாமியார்பாளையம், கரைதோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று, சூதாட்டத்தில் ஈடுபட்ட கார்வேந்தன், 28, திவாகர், 28, கிருஷ்ணமூர்த்தி, 25, சூர்யா, 20, சதீஷ், 28, மாணிக்கம், 55, கார்த்திக், 33, பன்னீர்செல்வம், 28, தனசேகர், 30 என, ஒன்பது பேரை கைது செய்து, 36 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.