/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம்; 43 பேர் மீது வழக்கு பதிவு
/
மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம்; 43 பேர் மீது வழக்கு பதிவு
மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம்; 43 பேர் மீது வழக்கு பதிவு
மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம்; 43 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : செப் 08, 2025 11:10 PM
பல்லடம்: பல்லடம், சின்னக்கரையில் உள்ள மனமகிழ் மன்றம் ஒன்றில், சட்டவிரோதமாக சூதாட்டம் நடந்து வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அங்கு சென்று விசாரித்த பல்லடம் போலீசார், சூதாடிய, 43 பேரை கைது செய்து வழக்கு பதிந்தனர்.
இதில், மனமகிழ் மன்ற உரிமையாளர்கள் கேரளாவை சேர்ந்த ஷாஜூ, திருப்பூர், வெள்ளியங்காட்டை சேர்ந்த ராஜேந்திரன், மகேந்திரன், மணிகண்டன், நீலகண்டன், ராபர்ட், பூபதி ஆகியோர் உட்பட, 43 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது.
போலீசார் கூறுகையில், 'சம்மந்தப்பட்ட மனமகிழ் மன்றத்தின் மீது ஏற்கனவே இரண்டு முறை சூதாட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சூதாட்டத்துக்கான பண பரிவர்த்தனைகள் அனைத்தும் கூகுள்பே வாயிலாக நடந்துள்ளது.
தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வரும் சின்னக்கரை மனமகிழ் மன்றத்தின் வங்கி கணக்கு முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆறுமுத்தாம்பாளையம், மகாலட்சுமி நகரில் உள்ள மனமகிழ் மன்றங்களை கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.