sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உயிரோடு விளையாட்டு! அரசு பஸ் டிரைவர்கள் விதிமீறல்: பயணிகள் அச்சம்

/

உயிரோடு விளையாட்டு! அரசு பஸ் டிரைவர்கள் விதிமீறல்: பயணிகள் அச்சம்

உயிரோடு விளையாட்டு! அரசு பஸ் டிரைவர்கள் விதிமீறல்: பயணிகள் அச்சம்

உயிரோடு விளையாட்டு! அரசு பஸ் டிரைவர்கள் விதிமீறல்: பயணிகள் அச்சம்


ADDED : செப் 04, 2024 02:02 AM

Google News

ADDED : செப் 04, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;போக்குவரத்து விதிகளை மதிக்காமல், அரசு பஸ் ஊழியர்கள் செயல்படுவது தொடர்ந்து நடக்கிறது. பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகளை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் மண்டலவாரியாக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயங்குகின்றன. திருப்பூர் பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்களில் சிலவற்றில் அவற்றின் டிரைவர், கண்டக்டர்கள் பயணிகளிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வது; பஸ்களை முறையாக பஸ் ஸ்டாப்பில் நிறுத்தாமல் செல்வது என்பது உள்ளிட்ட புகார்கள் அடிக்கடி பயணிகள் மத்தியில் எழுவது வாடிக்கையாக உள்ளது.

இது போன்ற புகார்கள் உரிய அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் போது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் நடக்கிறது. இருப்பினும் சிலர் தொடர்ந்து தங்கள் கடமையை மறந்து செயல்படுவது வியப்பை ஏற்படுத்துகிறது.

நேற்று முன்தினம் மொபைல் போனில் பேசியபடி பஸ்சை இயக்கிய அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தொடரும் புகார்கள்

---------------------

பல்லடம் ரோட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மதியம், 2:00 மணியளவில் கடுமையான வாகனப் போக்குவரத்து நிறைந்த நேரத்தில், கோவை நோக்கிச் சென்ற அரசு பஸ் ஒன்றின் டிரைவர், நீண்ட நேரம் இடைவிடாமல் பெரும் சப்தத்துடன் ஹாரன் அடித்தபடி சென்றுள்ளார். இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சமடைந்து திணறினர். இது குறித்து அவ்வழியாகச் சென்ற இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தார்.

* பல்லடம் - கோவை ரோட்டில், 30ம் தேதி இரவு, 11:30 மணியளவில், கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று, எதிர் திசையில் நீண்ட துாரம் வேகமாக வந்தது. சற்று தள்ளி டிவைடரில் இடைவெளி இருந்த பகுதியில் அந்த பஸ் ரோட்டின் இடதுபுறம் வந்து இணைந்தது.

அதே திசையில் காரில் வந்த ஒரு குடும்பத்தினர் சுதாரித்துக் கொண்டு தங்கள் காரை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. எதிர் திசையில் பஸ் வருவதை மொபைல் போனில் படம் பிடித்து, போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு புகார் அளிக்கப்பட்டது.

இதுபோல் அரசு பஸ் ஊழியர்கள் விதிகளை மீறியும், விபத்து ஏற்படும் விதமாகவும், பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் பஸ்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து, போக்குவரத்து கழக மற்றும் போக்குவரத்து துறையினர் பஸ் ஊழியர்களுக்கு உரிய அறிவுறுத்தலை உடனே வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us