/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் ;நாளை சிலைகள் பிரதிஷ்டை ஏற்பாடு தீவிரம்
/
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் ;நாளை சிலைகள் பிரதிஷ்டை ஏற்பாடு தீவிரம்
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் ;நாளை சிலைகள் பிரதிஷ்டை ஏற்பாடு தீவிரம்
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் ;நாளை சிலைகள் பிரதிஷ்டை ஏற்பாடு தீவிரம்
ADDED : செப் 06, 2024 03:25 AM

திருப்பூர்;விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் நாளை பிரதிஷ்டை செய்கின்றனர்.
வில் ஏந்திய விநாயகர், முருகன், சிவன் உடன் இருக்கும் வகையில், அனுமன் துாக்கி செல்வது போல், ரத விநாயகர், சிம்மவாகனம் விநாயகர், யானை வாகனம், ஆஞ்சநேயர் விநாயகர், கருட விநாயகர் என, 3.5, 5, 7, 9 மற்றும் 11 அடி உயரம் என, ஐந்து வகைகளில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
நாளை முதல் வரும், 10ம் தேதி வரை, நான்கு நாட்களும், மூன்று வேளைகளும் பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். விசர்ஜனம் வரை, ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம், இளைஞர் தினம் என்ற பெயரில் கொண்டாடவும், மரக்கன்று நடவும், சிறுவர், சிறுமியர்களுக்கான கலைநிகழ்ச்சிகள், பெண்களுக்கான குத்துவிளக்கு பூஜை, சமத்துவ வழிபாடு என, பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
10ம் தேதி ஊர்வலம்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்கவும் போலீசார் அறிவுறுத்தப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. விசர்ஜன ஊர்வலம், 9ம் தேதி அவிநாசி, தாராபுரம், பல்லடம், உடுமலை; 10 ம் தேதி திருப்பூர் மாநகரம் ஆகிய பகுதிகளில் விசர்ஜன ஊர்வலம் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கிறது.
போலீசார் ஆய்வு
விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடக்கும் ரோடுகள், பொதுக்கூட்டம் நடக்கும் இடம் ஆகியவற்றை திருப்பூர் தெற்கு போலீஸ் துணை கமிஷனர் கிரிஷ் யாதவ், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் மற்றும் மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கொடி அணி வகுப்பு ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி மாநகர போலீசார் சார்பில், கொடி அணி வகுப்பு ஊர்வலம் குமரன் சிலையில் நேற்று மாலை துவங்கியது. குமரன் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை, மங்கலம் ரோடு வழியாக ஆலாங்காட்டை சென்றடைந்தது. கமிஷனர் லட்சுமி தலைமையில் துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
-----------------------------------
4/5/6 காலம் படம்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, போலீஸ் கமிஷனர் லட்சுமி தலைமையில், போலீசார் கொடி நேற்று மாலை கொடி அணிவகுப்பு நடத்தினர்.
-----------------------------------
திருப்பூர், நடராஜ் தியேட்டர் ரோட்டில், ஹிந்து முன்னணி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் குறித்து மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் மற்றும் போலீஸ் துணை கமிஷனர் கிரிஷ்யாதவ் ஆகியோர் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர்.