/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சிலைகள் ஊர்வலம்; இன்று போக்குவரத்து மாற்றம்
/
விநாயகர் சிலைகள் ஊர்வலம்; இன்று போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலைகள் ஊர்வலம்; இன்று போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலைகள் ஊர்வலம்; இன்று போக்குவரத்து மாற்றம்
ADDED : ஆக 30, 2025 12:45 AM
திருப்பூர்; திருப்பூரில் ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பூரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அறிக்கை:
விநாயகர் ஊர்வலம் செல்வதால், அனைத்து கனரக சரக்கு வாகனங்கள், இன்று காலை 11:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, திருப்பூர் மாநகருக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது. மதியம் 2:00 முதல் இரவு, 10:00 மணி வரை புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ்கள் அனைத்தும், அவிநாசி சாலை, பழைய வடக்கு வட்டார போக்குவரத்து சந்திப்பு, 60 அடி ரோட்டில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். 60 அடி ரோடு தற்காலிக பஸ் நிலையமாக செயல்படும். பெருமாநல்லுாரில் இருந்து, புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் மற்றும் அனைத்தும், போயம்பாளையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். போயம்பாளையம் தற்காலிக பஸ் நிலையமாக செயல்படும்.
மத்தியபஸ் நிலையத்திலிருந்து, பெருமாநல்லுார் செல்லும் பஸ், வாகனங்கள், அவிநாசி சாலை வழியாக திருமுருகன்பூண்டியிலிருந்து பூலுவப்பட்டி நால்ரோடு வழியாக செல்ல வேண்டும். பெருமாநல்லுாரிலிருந்து மத்திய பஸ் ஸ்டாண்ட் வரும் வாகனங்கள் பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக மத்திய பஸ் ஸ்டாண்ட்சென்றடையும்.
அவிநாசியிலிருந்து மத்திய பஸ் ஸ்டாண்ட் செல்லும் அனைத்து வாகனங்கள், திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக மத்திய பஸ் நிலையத்தை சென்றடையும்.