/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தயார் நிலையில் விநாயகர் சிலைகள்
/
தயார் நிலையில் விநாயகர் சிலைகள்
ADDED : ஆக 11, 2025 08:49 PM
உடுமலை; விநாயகர் சதுர்த்தியையொட்டி ஹிந்து முன்னணியினர் திருப்பூர் மாவட்டத்தில், 5 ஆயிரம் சிலைகளை பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டு தோறும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும். நடப்பாண்டு, வரும், 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, திருப்பூர் அலகுமலை, வஞ்சிபாளையம் பிரிவு என, இரு இடங்களில் முழு வீச்சில் நடக்கிறது. இப்பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
தமிழகம் முழுவதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. மாநகரில் ஆயிரத்து, 100 சிலைகள் உட்பட மாவட்டம் முழுவதும், 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
27ம் தேதி துவங்கும் விழாவை, பத்து நாள் கொண்டாட உள்ளனர். இந்தாண்டு, 'நம்ம சாமி, நம்ம கோவில், நாமே பாதுகாப்போம்' என்ற கருப்பொருளோடு கொண்டாடப்படுகிறது. 30ம் தேதி நகரில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.
இதேபோன்று, வெவ்வேறு அமைப்புகளும் விநாயகர் சிலைகளைத் தயார் செய்து, விழா கொண்டாட்டத்துக்கு தயாராக உள்ளன.