ADDED : ஜூலை 14, 2026 07:47 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் நடராஜ் தியேட்டர் ரோடு ஆலாங்காடு பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையையொட்டி குவித்து வைக்கப்பட்ட குப்பைக்கு யாரோ நேற்று மாலை தீ வைத்து சென்றனர். குப்பை முழுதும் தீ பரவி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுதும் புகை மண்டலம் சூழ்ந்தது.
ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். இதனால், தற்காலிகமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தெற்கு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
