/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பைக்கு தீ வைப்பு: மூச்சுத்திணறும் மக்கள்
/
குப்பைக்கு தீ வைப்பு: மூச்சுத்திணறும் மக்கள்
ADDED : நவ 04, 2025 12:08 AM

வீணாகும் தண்ணீர்
திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப் சிக்னல் சந்திப்பு முன்புறம் தண்ணீர் திறந்து விடும் கேட் வால்வு பழுதாகி, தண்ணீர் 24 மணி நேரமும் தொடர்ந்து வீணாகிறது.
- அபித், பங்களா ஸ்டாப். (படம் உண்டு)
திருப்பூர், 32வது வார்டு, சூர்யா காலனியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- ரங்கநாதன், சூர்யா காலனி. (படம் உண்டு)
திருப்பூர், மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டனில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாகிறது.
- ரமேஷ், அமர்ஜோதி கார்டன். (படம் உண்டு)
மின்சாரம் வீண்
திருப்பூர், நஞ்சப்பா பள்ளி வீதியில் பகலிலும் மின்விளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. சரியான நேரத்துக்கு விளக்குகளை அணைத்து மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டும்.
- வின்சென்ட்ராஜ், ராயபுரம். (படம் உண்டு)
சேதமாகும் சாலை
பெருமாநல்லுார், மும்மூர்த்தி நகரில் சாலை தரமற்ற முறையில், குழாய் இணைப்புகளை சரிசெய்யாமல், அவசர கதியில் போடப்பட்டுள்ளது.
- செல்வராஜ், மும்மூர்த்தி நகர். (படம் உண்டு)
சுத்தம் செய்யுங்க...
திருப்பூர், 55வது வார்டு, மாரியம்மன் கோவில் பின்புற வீதி ரோட்டோரம் முட்புதர் நிறைந்து காணப்படுகிறது. சுத்தம் செய்ய வேண்டும்.
- புஷ்பா, பெரிச்சிபாளையம். (படம் உண்டு)
குப்பைக்கு தீ
திருப்பூர், எஸ்.ஆர்.சி. மில் ரயில் பாலத்தின் கீழ், குத்துாஸ்புரம் பகுதியில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால், அவ்வழியாக செல்வோர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.
- நடராஜன், குத்துாஸ்புரம். (படம் உண்டு)
ஆண்டிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலைய சாலையில் குப்பை கொட்டி தீ வைக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறுகின்றனர்.
- வரதன், ஆண்டிபாளையம். (படம் உண்டு)
இடம் மாற்றுங்க
திருப்பூர், 26வது வார்டு, குமார் நகர் - சிறுபூலுவபட்டி வழியில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை இடமாற்ற வேண்டும். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
- ஈஸ்வரமூர்த்தி, சிறுபூலுவபட்டி. (படம் உண்டு)
சாலை சேதம்
திருப்பூர், பூலுவப்பட்டி நால்ரோடு சிக்னல் சந்திப்பில் குழாய் உடைந்து தண்ணீர் ஒரு மாதமாக வீணாகிறது. சாலை சேதமாகி, குழியாகியுள்ளது.
- மனோகர், அண்ணா காலனி. (படம் உண்டு)

